search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் தகராறு"

    பாபநாசம் அருகே கடன் தகராறில் விவசாயியை தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே மணப்படுகை கிராமம் காலனி தெருவில் வசித்து வருபவர் சாமிநாதன் (வயது 33). விவசாயி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவரிடம் ரூ.11 ஆயிரத்து 500 கடன் பெற்றிருந்தார். இந்த கடனில் ரூ.10 ஆயிரம் வரை செலுத்திவிட்டார். மீதி ரூ.1500 தராததால் மாதவன் குடும்பத்தை சேர்ந்தவர்களான கல்யாண ராமன், ஜானகிராமன், ரகுராமன், ரகுநாதன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை அடித்து உதைத்து தாக்கியுள்ளனர்.

    இதில் சாமிநாதன் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ் பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குபதிவு செய்து கல்யாணராமன் வயது 25 என்பவரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சிவக்குமார் கல்யாணராமனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மூவரையும் தேடி வருகின்றனர்.

    ஊத்துக்குளி அருகே மாமனாரை குத்தி கொன்ற மருமகன் கைது கடனை திருப்பி தராததால் கொன்றதாக வாக்கு மூலம்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள மொலக் கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் (54) சத்துணவு ஊழியர். இவரது மகள் வனிதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்தருக்கும் திருமணம் நடைபெற்றது. கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து வனிதா தனது தந்தை சுந்தரேசனுக்கு தகவல் தெரிவித்தார்.அவர் தகராறை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலசந்தர் கத்தியால் சுந்தரேசனை குத்தினார். இதில் அவர் அதே இடத்தில் இறந்தார்.

    இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசந்தரை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-

    எனது மாமனார் சுந்தரேசன் என்னிடம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள ரூ. 30 ஆயிரத்தை வாங்கி தரும்படி மனைவியிடம் தெரிவித்தேன். அவர் வாங்கி தர மறுத்தார். இதனால் மனைவியிடம் தகராறு செய்தேன். அவர் தனது தந்தைக்கு போன் செய்தார். இதனை தொடர்ந்து சுந்தரேசன் எனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் எனக்கும் தகராறு உருவானது. அவரை கத்தியால் குத்தினேன். இதில் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மதகடிப்பட்டில் வட்டிக்கு பணம் வாங்கியது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தந்தை- மகன் தற்கொலை செய்து கொண்டனர்.

    திருபுவனை:

    மதகடிப்பட்டு புது நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவர், கடலூர் செல்லும் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி பவானி. அவர் 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பவித்ரா (24), சவுந்தர்யா (20) ஆகிய மகள்களும், சவுந்தர் (19) என்ற மகனும் உள்ளனர்.

    இதில், பவித்ராவுக்கு திருமணமாகி விட்டது. ஆனந்தனுக்கு குடிப்பழக்கம் உண்டு. சமீப காலமாக குடிப்பழக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் ஓட்டலை சரியாக கவனிக்க வில்லை. மகள் சவுந்தர்யா, மகன் சவுந்தர் ஆகியோர் தான் ஓட்டலை கவனித்து வந்தனர்.

    இந்த நிலையில் ஆனந்தன் ஒரு நபரிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். ஆனால், அதை சரியாக செலுத்தவில்லை. அவர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்.

    இதனால் தந்தை வாங்கிய கடனை நான் செலுத்துகிறேன் என கூறி சவுந்தர் அந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி செலுத்தி வந்தார்.

    இந்த வி‌ஷயம் ஆனந்தனுக்கு தெரியாது. நேற்று அவரது கவனத்துக்கு தெரிய வந்தது. இதனால் மகன் மீது கோபம் அடைந்தார்.

    கடைக்கு வந்த ஆனந்தன் மகனிடம் எனக்கு தெரியாமல் எப்படி பணம் கொடுக்கலாம்? என தகராறு செய்தார். அங்கிருந்த மரக் கட்டையை எடுத்து அடிக்க போனார். அதை சவுந்தர் பிடுங்கி எறிந்தார்.

    அப்போது ஆனந்தன் கை பிசகி விட்டது. இதில் கடும் கோபம் அடைந்த அவர் அங்கிருந்து வெளியேறி விட்டார். இந்த சம்பவத்தால் வேதனை அடைந்த சவுந்தர் ஓட்டலில் உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது யாருக்கும் தெரியாது.

    சிறிது நேரம் கழித்து ஆனந்தன் ஓட்டலுக்கு வந்தார். மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலைதான் அவர்கள் தற்கொலை செய்து கொண்ட வி‌ஷயம் வெளியே தெரியவந்தது.

    இதுபற்றி திருபுவனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ் பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×